அத்தி வரதர் (Athi varadhar)

அத்தி வரதா வரதா என வரிசையில் காத்திருந்து சுத்தி சுத்தி வந்தோம் சுந்தரனை தரிசிக்க கத்திமுனையில் நிற்பதுபோல் காலிரண்டும் கடுத்தாலும் சக்திதனை திரட்டி சலிக்காமல் ஊர்ந்தோமே சுத்தி எங்கும் பார்த்தாலும் எள் விழவும் இடமில்லை சித்தம் இரங்கி சீக்கிரமே அருள் தாராய் என் பித்தம் தீர பிதற்றுகிறேன் பெருமாளே சத்தியமாய் சொல்லுகிறேன் சாமானியர்க்கு எளிதல்ல வித்தையெல்லாம் தெரிந்தால்தான் வில்லங்கமின்றி பத்திரமாய் வீடு வந்து பாங்குடனே சேர்ந்திடலாம் அத்திக்கே ஒரு கும்பிடு புத்திக்கு உரைத்ததப்பா